Skip to main content

Posts

Showing posts from November, 2020

தக்கோலம் ஏ.ஜே. ராமசாமி முதலியார் exMLA

  செங்குந்தர் கைக்கோள முதலியார்                 குலத்தோன்றல்  மொழிப் போராட்ட தியாகி, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊழல் செய்த போது அதை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியவர், மூன்று முறை MLA வான வெற்றி பெற்ற தக்கோலம்  ஏ.ஜே. ராமசாமி முதலியார் (07.07.1927 - ?.?.??) பிறப்பு மற்றும் வாழ்க்கை  அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் தக்கோலம் என்னும் கிராமத்தில் செங்குந்தர் கைக்கோளர் குலத்தில்  ஜகன்னாதன் செல்லப்ப முதலியார் என்பவருக்கு மகனாக 7 ஜூலை 1927 ஆம் ஆண்டு பிறந்தார். ஒரு குடும்பம் விவசாயம் மற்றும் ஜவுளித் தொழிலை செய்து வந்தனர். தக்கோலம் வாரிய தொடக்கப் பள்ளியில் கல்வி கற்று பின்பு ஒன்பதாம் வகுப்பு வரை அரக்கோணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். திருமணத்திற்குப் பின் இவருக்கு மூன்று மகன்களும் 2 மகள்களும் பிறந்தனர். சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் கொண்டு சிறு வயதிலேயே தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். தக்கோலம் நேதாஜி பள்ளியின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். உற்சாகம்...

இ.கே. துரைசாமி முதலியார் exMLA குடியாத்தம்

  செங்குந்தர் கைக்கோள முதலியார்                 குலத்தோன்றல் மொழி போராட்டத் தியாகி, குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குடியாத்தம் இ.கே. துரைசாமி முதலியார்  பிறப்பு மற்றும் வாழ்க்கை அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் குடியாத்தம் நகரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் வம்சத்தில் ஜனவரி 6, 1929 அன்று பிறந்தார், இவர் 5-ம் வகுப்பு வரை காந்திஜீ இலவச ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயின்றார். இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். 1946 முதல் 1952 வரை தி.மு.க. அபிமானி : 1952 முதல் தி.மு.க. உறுப்பினர் ; உறுப்பி னர், பொருளாளர் , குடியாத்தம் நகர தி.மு. கழக செயற் குழு ;  செயலாளர், துணைக்குழு ; நகர தி.மு.க. பிரிவு ;  உறுப்பினர், வட்ட தி.மு. கழகம், மாவட்ட தி.மு. கழகம் ;  உறுப்பினர், தி.மு.க. பொதுக் குழு தி.மு.க. போராட்டங்களில் பங்கு கொண் டதால் 1963, 1965 ஆகிய வரு டங்களில் சிறையிலடைக்கப்பட் டார். 1957-ம் வருடத்திலிருந்து தி.மு.க. கொள்கைகளைப் பரப்புச் செயலாளர் பதவி வகித்தார் 1959 முதல் 1964 வரை குடியாத்தம் ஊராட்சி மன்ற உறுப்...

எகிரி சஞ்சீவி தியாகராஜ முதலியார் exMLA

  ள் சேவகர், சுதந்திர போராட்ட வீரர், தமிழக வடக்கெல்லை போராட்டத்தை தீவிரப்படுத்தி திருத்தணி பள்ளிப்பட்டு தொகுதிகளை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மாற்ற காரணமானவர், திருத்தணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எகிரி சஞ்சீவி தியாகராஜ  முதலியார் (?.?.1928 - ?.?.??) பிறப்பு   இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு வட்டத்தில் பொதட்டூர்பேட்டை என்னும் ஊரில் பெரும் செல்வந்தர் பெருநிலக்கிழார் ஜவுளி வர்த்தக எகிரி சஞ்சீவி முதலியாருக்கு மகனாக 1928 இல் பிறந்தார் எஸ்எஸ்எல்சி வரை படித்த இவர் சிறுவயது முதலே சமூக சேவை அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் என ஆறு வாரிசுகள். வாழ்க்கை 25 ஆண்டுகள் பொதட்டூர் பேட்டை நகரப் பஞ்சாயத்தின் தலைவராக பதவி வகித்தவர். பல கூட்டுறவுச் சங்கங் களில் பனியாற்றியவர்.  1947-ம் ஆண்டு முதல்  6-3-1971  வரை, மாநில கைத்தறி நெச வாளர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர். தமிழக ஆந்திர எல்லை பிரிக்கும்போது பள்ளிப்பட்டு திருத்தணி தொகுதிகள் ஆந்திராகுல் சேர்க்கப்பட்டது மேலும் 1952ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் த...

பனப்பாக்கம் எஸ்.சி. சடையப்ப முதலியார் exMLA

 செங்குந்தர் கைக்கோள முதலியார்                 குலத்தோன்றல்  சுதந்திர போராட்ட வீரர், மக்கள் சேவகர், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் MLA வான வெற்றி பெற்ற பனப்பாக்கம்  எஸ்.சி. சடையப்ப முதலியார் (21.08.1912 -?.?.??) பிறப்பு மற்றும் வாழ்க்கை வட ஆற்காடு மாவட்டத்தில்  பனப்பாக்கம்  கிராமத்தில் நெசவு செய்யும் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் ஆகஸ்ட் 21, 1912 இல் பிறந்தார். இவருக்கு ஆறு குழந்தைகள். தனது சிறு வயதிலேயே சுதந்திர உணர்வு கொண்ட இவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக கட்சிப்பணி சுதந்திரப் போராட்டங்கள் செய்து வந்தார் உறுப்பினர், காங்கிரஸ் கட்சி, 1939 முதல் உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் குழு வில் பதவி வகித்தார்.  துணைத் தலைவர், வட ஆற்காடு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி, 1946-56;  சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு கொண்ட இவருக்கு 1934 இல் நீதிமன்ற சிறை;  மீண்டும் ஆகஸ்ட் 1942 அன்று நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் தீவிரமாக மக்களைத் திரட்டி...

எம். சுந்தரம் முதலியார் ex MLA

 செங்குந்தர் கைக்கோள முதலியார்                 குலத்தோன்றல் மக்கள் சேவகர், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை MLA வான வெற்றி பெற்ற எம். சுந்தரம் முதலியார் (10.08.1921 - ?.?.??) பிறப்பு மற்றும்  வாழ்க்கை நன்றி தென்னார்க்காடு மாவட்டத்தில், திருக்கோயிலூர் என்னும் ஊரில் செங்குந்தர் குலத்தில் பெரும் செல்வந்தர், ஜவுளி வியாபாரி, பெருநிலக்கிழாராக இருந்த முத்துசாமி முதலியார் க்கு ஆகஸ்டு 10 1921 யில் பிறந்தார். SSLC வரை படித்தார். பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இவர் குடும்பத்திற்கு சொந்தமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது . வகித்த பதவிகள் திருக்கோயிலூர் நகர தலைவராக(Chairman) பல ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் ரிஷிவந்தியம் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார். அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்றுள்ளார். இவரின் அண்ணன் மகன் எஸ். சிவராஜ் முதலியார் நான்கு முறை ரிஷிவந்தியம் தொகுதியில் எம்எல்ஏ  வாக வெற்றி பெற்றவர் தேர்தலின்போது பதிவு...

எம். ஆர். கந்தசாமி முதலியார் exMLA

  செங்குந்தர் கைக்கோள முதலியார்                 குலத்தோன்றல்  சுதந்திரப் போராட்ட வீரர், மக்கள் சேவகர், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் முதல் MLA வான எம். ஆர். கந்தசாமி முதலியார் (02.10.1913 - ?.?.??) பிறப்பு:  சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி வேலநத்தம் கிராமத்தில் அக்டோபர் 2, 1913 இல் வசதிவாய்ந்த செங்குந்தர் கைக்கோள முதலியார் வம்சத்தில் பிறந்தார். இவரின் குலத்தொழிலான ஜவுளி தொழிலை பெருமளவில் செய்து வந்தார். இவருக்கு ஒன்பது குழந்தைகள் உள்ளது. வாழ்க்கை தனது சிறு வயதிலேயே காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக கட்சி பணியாற்றியவர்  50 ஆண்டுகள் அரசியலில் இருந்த தலைவர்,  சேலம் தாலுகா காங்கிரஸ் குழு தலைவராக 1945-53; பணியாற்றினார். தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் 1944 – 1947 கடைசிவரை மாவட்ட காங்கிரஸ் குழு உறுப்பினர், சிறந்த சமூக சேவகர். உறுப்பினர், மாவட்ட மேம்பாடு மற்றும் ஃபிர்கா மேம்பாட்டுக் குழுக்கள், 1946-53. 1957ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண தே...

காஞ்சி மணிமொழியார் exMLA

   கஞ்சி மணிமொழியார் (9 மே 1900 - 7 ஜூன் 1972) - தமிழ் அறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, சமூகத் தொண்டாளர் ஆவார். திராவிடர் இயக்கக் கருத்துக்களைக் கொண்ட 'போர் வாள்' என்ற இதழின் ஆசிரியராவார். சுயமரியாதை செம்மல் என்று பல பட்டங்களைப் பெற்றவர்.  வாழ்க்கைக் குறிப்பு    காஞ்சி மணிமொழியார் - தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சிபுரத்தில் தமிழ் புலவரும் நூல் வணிகருமாகிய பெருநகர் செங்கல்வராய முதலியாரின் கடைசி மகனாக 09.05.1900 இல் பிறந்தவர் ஆவார்.காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பயின்றார். இவருடைய துணைவியார் அபிராமி அம்மையார். இவருடைய மூத்த மகன் பேராசிரியர் மா. இளஞ்செழியன், இளைய மகன் மா. நடராசன், கட்டிட ஒப்பந்தக்காரர் மற்றும் மகள் மா. தமிழ் செல்வி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். ந. இளவரசு இவரின் பேரனாவார், மற்றும் ந. கலைச்செல்வி, ந. தேன்மொழி, ந. வசந்தி இவருடைய பேத்திகள். . இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். 1962 தேர்தலில் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   ...

சு. இரத்தினவேலு முதலியார் Ex.INA

  நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய  இராணுவத்தில் - INA (மலேஷியாவின் ஜோஹூரு-பாரு படைப்பிரிவின்) சுபேதாராக, இந்திய விடுதலை போரில் பங்கெடுத்த தெய்வத்திரு. வைலாம்பூர்  #செங்குந்த_கைக்கோளர் மரபில் பிறந்த சு. #இரத்தினவேலு_முதலியார் Ex.INA (12/12/1923 - 07/06/2000)

கோனேரியப்பர் (எ) குகனேரியப்ப முதலியார்

  கோனேரியப்பர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். உபதேச காண்டம் என்னும் நூல் பாடியவர். உபதேச காண்டம் என்னும் பெயரில் மற்றொரு புலவர் ஞானவரோதயர் பாடிய நூலும் உள்ளது. தமிழிலுள்ள இரண்டு ‘உபதேச காண்டம்’ நூல்களையும் ஒப்பிடும்போது ஞானவரோதயர் நூல் வடமொழி நூலை அடியொற்றிச் செல்வதையும், கோனேரியப்பர் நூல் தமிழிலுள்ள கந்தபுராணத்தைத் தழுவிச் செல்வதையும் உணரமுடியும். இவர் செங்குந்தர்  சார்ந்தவர். இவர் இயற்ப்பெயர் குகநேரியப்ப முதலியார் ஆகும். சிவானந்த முதலியார் - அமுதாம்பிகை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.  

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக...

ஆதி சங்கர் exMP

  பிறப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் வசதி வாய்ந்த செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் ஸ்ரீ ஆதிசேஷன் - பட்டம்மல் தம்பதியருக்கு 07 மார்ச் 1957இல் பிறந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. , பி.எல் படிப்பை படித்து முடித்தார் வாழ்க்கை 13 ஜூன் 1990 அன்று திருமதி. அஞ்சுகம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திறந்த தொழில் வழக்கறிஞர் கவிஞர், அரசியல் மற்றும் சமூக சேவகராக பணியாற்றிவருகிறார்.  பதவிகள்   நிர்வாக உறுப்பினர், திராவிட முனேத்ரா கழகம், தமிழ்நாடு தலைவர், திமுக இளைஞர் பிரிவு, டி.எம்.கே, கடலூர் 1999. 1999 வில் கடலூர் தொகுதியில் இருந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-2000 உறுப்பினர், மத்திய விவசாயக் குழு உறுப்பினர்,  நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி குழு 2000-2004 உறுப்பினர் ஆலோசனைக் குழு, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் 2002-2004  உறுப்பினர், மத்திய உள்துறை குழு 2003-2004  உறுப்பினர், மத்திய அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழு 2004  உறுப்பினர், மத...