(04.10.1902 - 08.09.1976)
பிறப்பு
பிறப்பு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.
வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்
வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர்.
காந்தி மகானின் கவனத்துக்கு நெசவாளர் களின் பிரச்சனைகளை கொண்டு சென்ற குழுவின் மூன்று உறுப்பினர் களில் 28 வயதே நிரம்பிய திரு VSS அவர்களும் ஒருவர் தனது 15 ஆவது வயதிலேயே ல் வீரவநல்லூரில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தை தோற்று வித்து, திரு.M.K.ஆறுமுக முதலியார் அவர்களை தலைவராகவும் தான் உட்பட 22 செங்குந்தர்களை உறுப்பி னர்களாக்கி சங்கத்தை 1923ல் பதிவு செய்திருக்கிறார். தென்னிந்தி ய செங்குந்த மகாஜன சங்கம் தோற்று வித்த காலத்திலும், 08.12,1938ல் சங்கத்தை பதிவு செய்தபோது அதன் செயற்கு குழு உறுப்பினர்களில் இவரும் ஒருவராகவும், சென்னை மயிலாப்பூரில் நடந்த மூன்றாவது செங்குந்தர் வாலிபர் மாநாட்டின் வராகவும் குறிஞ்சிப்பாடி செங்குந்தர் வாலிபர் 10ஆவது மாநில மாநாட்டின் தலைவராகவும், அம்பையில் நடை பெற்ற செங்குந்தர் வாலிபர் மாநாட டின் வரவேற்புக் குழுத்தலைவராகவும் இருந்து திறம்பட செயல்பட்டுள்ளார்.
1932ம் ஆண்டு சுதந்திர போராட் டத்தில் நேரடியாகப் பங்கேற்றதோடு அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு, கள்ள்கடை மறியல் போன்ற போராட்டங் களிலும் ஈடுபட்டார், 1933 முதல் வரை கதேசி பொருட்காட்சியை ஸ்ரீ நெல்லையப்பர் ஆனி தேரோட்டத் திருவிழாவின்போது நடத்தியுள்ளார்
1937-1938ல் நடைபெற்ற நகர் மன்றத் தேர்தலில் நெல்லை, மேலைப் பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட நெல்லை நகர சபைத் தலைவ ராகப் தேர்ந்தெடுக்கப் பட்டார், நெல்லை நகர காங்கிரஸ் குழுவின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் குழுவிலும் பணியாற்றி யுள்ளார். சுதேசி நற்சான்றுக் குழுவின் செயலாளராகவும் 1936 முதல் 1942 வரை நெல்லை மாவட்ட போக்குவ ரத்துக் குழுவில் இயக்கு நராகவும் பணியாற்றியுள்ளார்.
திரு.VSS அவர் கள் நகர் மன்ற தலைவராக பணிசெய்த காலத்தில் அவர் செய்த முக்கிய பணிகள்
1. தற்போது இயங்கும் நெல்லை நகர் மத்திய பேருந்து நிலையம் அமைத்தது.
2. நெல்லை புகைவண்டி நிலையத்தி லிருந்து பேருந்து நிலையத்திற்குச் செல் லும் சுற்றுப்பாதைக் கு மாற்றாக தனது நண்பர் த.மு.சாகிப் அவர்களிடமிருந்து நகராட்சிக்கு இலவசமாக இடத்தைப் பெற்று த.மு. சாலை என நேர் பாதையினை அமைத்தது.
3.நகரின் வீதிகளை விரிவுபடுத்தியது
4. நகரில் கழிவு நீரோடைக ள் அமைத்தது.
5. முதன் முதலாக சிமெண்ட் சாலை அமைத்தது.
வெள்ளையனே வெளியே று போராட்டத்தின் போது கைதாகி 21.02.1942 முதல் 01.04.1945 வரை இரண்டாண்டுகளுக்கு மேல் வேலூர் தஞ்சை சிறையில் அடைபட்டு இடர் நிரம்பிய வாழ்வை அனுபவித்துள்ளார்.
1945ல் மெட்ராஸ் மாகாண சட்டமள்றத் தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் திரு.VSS அவர் கள் போட்யிட்டு எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய ஜவுளிக் கட்டுப்பாடு வாரியத்தின் தமிழகப் பிரதிநிதியாகவும், 1946 சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், 1949ல் கைத்தறித் தொழில் பாதுகாப்பு மாநாட்டில் தலைமை தாங்கி தொழில் முன்னேற் றத்திற்கான பல திட்டங்களைத் தெரிவித்துள்ளார்கள்
1952 தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில்
1958ல் திருநெல்வேலிபேட்டை நகரில் முதல் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை அமைய அப்போதைய கைத் தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.M. P. நாச்சிமுத்து செங்குந்தர் அவர்களுக்குத் துணையாக நின்றும் நூற்பாலை இயக்குநராகவும் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் கள்.
கைத்தறி நெசவாளர்கள் நூற்பாலையில் வேலை பெறுவதற்கு மிகுந்த உதவியாக இருந்துள்ளார்கள் இந்த நூற்பாலையைத் தொடர்ந்து தமிழகத்தில் 18 கூட்டுறவு நூற்பாலை க ள் தொடங் க ப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ம்ன்மீகப் பணியில் ஈடுபட்டு ஆண்டுக்குப் பின்னர் கிருபானந்த வாரியார் அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றார். திரு.வி.எஸ்.எஸ் அவர்கள் தமது 74ஆவது வயதில் 08.09.1976 அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.
J
.
Comments
Post a Comment