வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (01.03.1926– 02.01.1988) என்றழைக்கப்படுபவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1960-80களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிழல் உலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். பூர்விகம் இவரின் பூர்விகம் வேலூர் வட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆகும். வாழ்க்கை தனது 20வது வயதில் ஒருவருடைய ஆலோசனையின் பேரில் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு வேலை தேடி செல்கிறார்.1945-களில் மும்பை ரயில்வே நிலையத்தில் சுமைதூக்குக் கூலித்தொழிலாளியாக தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேலை செய்தார்.பின்னர் துறைமுகத்திற்கு வேலைக்கு செல்கிறார்.தங்குவதற்கு இடம் இல்லாததால் தமிழர்களின் மற்றும் தென்னிந்திய மக்கள் மிகுந்த பகுதியான மும்பையில் உள்ள தாராவிக்கு ஒரு சிலருடைய உதவியுடன் செல்கிறார்.தாராவி பகுதி அந்த காலத்தில் வேலைவாய்ப்பு தேடி பஞ்சம் பிழைக்க சென்றவர்களின் பகுதியாகவும், பட்டினி மற்றும் பசி மிகுந்த பகுதியாக இருந்தது.வர்தா துறைமுகத்தில் வேலை செய்தால் முதலில் அங்கிருந்து உணவு பொருட்கள் மற்றும் துணிகளை கடத்தி கொண்ட...