என்றழைக்கப்படுபவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1960-80களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிழல் உலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
பூர்விகம்
இவரின் பூர்விகம் வேலூர் வட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆகும்.
வாழ்க்கை
தனது 20வது வயதில் ஒருவருடைய ஆலோசனையின் பேரில் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு வேலை தேடி செல்கிறார்.1945-களில் மும்பை ரயில்வே நிலையத்தில் சுமைதூக்குக் கூலித்தொழிலாளியாக தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேலை செய்தார்.பின்னர் துறைமுகத்திற்கு வேலைக்கு செல்கிறார்.தங்குவதற்கு இடம் இல்லாததால் தமிழர்களின் மற்றும் தென்னிந்திய மக்கள் மிகுந்த பகுதியான மும்பையில் உள்ள தாராவிக்கு ஒரு சிலருடைய உதவியுடன் செல்கிறார்.தாராவி பகுதி அந்த காலத்தில் வேலைவாய்ப்பு தேடி பஞ்சம் பிழைக்க சென்றவர்களின் பகுதியாகவும், பட்டினி மற்றும் பசி மிகுந்த பகுதியாக இருந்தது.வர்தா துறைமுகத்தில் வேலை செய்தால் முதலில் அங்கிருந்து உணவு பொருட்கள் மற்றும் துணிகளை கடத்தி கொண்டு வந்து தாராவி மக்களுக்கு கொடுப்பதை முதலில் ஆரம்பித்தார்.பின்னர் சில வருடங்களுக்கு பிறகு மராட்டிய மொழ வெறியர்கள் மராட்டிய அரசின் துணையுடன் தாராவி மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வரப்போகிறார்கள் என்பது வர்தாவுக்கு தெரிந்ததும் வர்தா தனது தலைமையில் ஒரு குழுவுடன் சென்று அவர்களுடன் ஆயுதங்கள் கொண்டு சண்டை போடுகின்றார்.பின்னர் போலீஸிடம் சென்று பிரச்சினை முடிகிறது.இந்த இடத்தில்தான் தாராவியில் வர்தாவை மக்கள் சின்ன டானாக(Don) பார்க்கின்றனர்.பின்னர் சிறிய ஆயுதங்களுடன் இருந்த வரதராஜ முதலியார் நவீன துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பெரிய தாதாவாகவே (Gang star) மாறுகிறார். தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் நான் இருக்கிறேன் அவர்களை ஒருவலி பண்ணிடுவேன் என்று வரதராஜ முதலியார் உறுதியுடன் இருந்தார்.தமிழருக்கு வரதராஜ முதலியார் இருக்கிறார் என்று மாராட்டிய மாநிலத்தில் எதிரிகள் பயந்தனர்.பின்னர் சட்டத்துக்கு புறம்பான போதை பொருட்கள் கடத்துதல் மற்றும் கப்பல் திருட்டு & கட்டப்பஞ்சாயத்து தொழிலை செய்து படிப்படியாக வளர்ந்த வர்தாபாய் 1960-களில் மிகப்பெரிய தாதாவாக மும்பையில் உருவானார்.அச்சமயத்தில் மும்பையில் மிகப்பெரிய நிழல் உலகதாதாவாக இருந்த கரீம்லாலா,ஹாஜி மஸ்தான் உடனும் உலக தாதாக்களுடனும் வர்தா கைகோர்க்கிறார்.1960 முதல் 1980 காலங்களில் மிகப்பெரிய சக்தியுடன் திகழ்ந்தார் வர்தா இவரின் செல்வாக்கை பார்த்து மராட்டிய அரசே அதிர்ந்து போனது.அந்த சமயத்தில் தான் மும்பை தாராவியில் இருந்து மக்களை வெளியேற்ற நடந்த பிரச்சினையில் மராட்டிய முதல்வர் பால்தாக்கரே(சிவசேனா)வுடன் நேரடியாக பேசி தாராவி நாங்கள் காலி செய்ய முடியாது வேறு ஏதாவது வேண்டும் என்றால் சொல்லுங்கள் என்று கூறும்போது மாராட்டிய முதல்வர் பால்தாக்கரே (சிவசேனா) தாராவி மற்றும் மும்பை உள்ள ஓட்டு தனக்கு வேண்டும் என்ற மறைமுக போர்வையில் இந்து பாரம்பரிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை மிகப்பெரிய அளவில் நீங்கள் மும்பை தாராவியில் உங்கள் தலைமையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்.மிகப்பெரிய ஆன்மீகவாதியான வர்தாவும் மிகப்பிரமாண்டமான அளவில் விநாயகர் சதுர்த்தி இந்திய அளவில் மும்பை தாராவியில் நடத்துகிறார்.இவர் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தாராவி மற்றும் மும்பையில் உள்ள தமிழர்களுக்கு தானமாகவே வாழ்நாள் முழுவதும் வழங்கினார்.பம்பாயில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு இருந்த காலத்தில் தமிழர்கள் மற்றும் ஏழைகளுக்கு இவர் பெரு உதவி செய்தார்.தனது ஒரே மகளுக்கு எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை.முதலியார் தனது சமூகத்திற்குள் நீதியை வழங்க ஒரு இணையான நீதித்துறையை கூட நடத்துகிறார் என்று பம்பாய் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.1982 ல் மும்பையில் தாதாக்களை கட்டுபடுத்த போலீஸ் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் வர்தாவின் ஆட்களிடம் பேசி குழுவை விட்டு வெளியேற வைத்தல் மற்றும் என்கவுண்டர் போன்ற சம்பவங்களால் மராட்டிய அரசின் பேச்சுவார்த்தை மூலம் சென்னைக்கு வந்தார்.
ஆன்மீகம்
மாத்தூங்கா மற்றும் தாராவி பகுதிகளில் அதிகமான ஆதிக்கம் செலுத்தி வந்தார் வரதராஜன்.இவர் தீவிர முருகபக்தன் ஆவார். இவர் மாத்தூங்கா பகுதியில் உள்ள கணபதி கோயிலில், விநாயக சதூர்த்தி விழாவை ஆண்டுதோறும் மிகப்பிரபலமாக நடத்தி வந்தார்.
குடும்பம்
வர்தாவுக்கு மகாலட்சுமி என்ற ஒரே மகள் மட்டுமே.அவர் சென்னையில் வசித்து வந்தார்.
1983 -ல் மே மாதம் வர்தாவின் மகள் மெட்ராஸில் திருமணம் செய்துகொண்டபோது, எம்.ஜி.ஆரும் அவரது மனைவியும் முக்கிய விருந்தினர்களாக இருந்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸில் பணம் செலுத்திய விளம்பரமாக வெளியிடப்பட்ட திருமண ஜோடியுடன் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வர்தா வைத்திருந்தார்.(இதுபற்றி இந்தியா டுடே புத்தகத்தில்) உள்ளது.
மரணம்
1980-பிறகு, இவர் சென்னைக்குத் திரும்ப வந்தார். 1988-ம் ஆண்டு தன்னுடைய 62-ம் அகவையில் மாரடைப்பால் காலமானார்.
பின்னர் வர்தாவின் இறப்பை அறிந்த நிழல் உலக தாதாவும் நெருங்கிய நண்பருமான ஹாஜி மஸ்தான் வர்தாவின் உடல் மும்பை தாராவியில் தான் புதைக்கப்பட வேண்டும் என்று கூறி தனிவிமானம் மூலமாக சென்னையில் இருந்து மும்பைக்கு அவரின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தார்.
'வர்தா'வின் வாழ்க்கை வரலாறு வைத்து இந்திய & தமிழக திரைப்படங்கள் (Movie's)
1987-ம் ஆண்டு, மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் திரைப்படத்தில், வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. கமல் ஹாசன் அக்கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தயவான் என்ற பெயரில் வினோத் கண்ணா நடிப்பில் இந்தியிலும் இப்படம் 21 அக்டோபர், 1988 அன்று வெளியானது.
தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த, அமிதாப் பச்சன் அவருடைய அக்னீபாத் (2012) திரைப்படத்திலுள்ள வசனங்கள் வரதராஜ முதலியார் பயன்படுத்தியதில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறினார்.
2013 ல் வெளிவந்த தளபதி விஜயின் நடித்த 'தலைவா' படமும் இவரின் வாழ்க்கை வரலாற்று கதைதான்.சத்தியராஜ் இவரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2015 ல் வெளிவந்த தெலுங்கு மற்றும் தமிழ் நடிகரான ஆதி பினிசெட்டி நடித்த யாகாவரையினும் நா காக்க என்ற படத்திலும் இவர் சார்ந்த கதாபாத்திரம் வரும்.
2018 ல் வெளிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா' படமும் இவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதையாகும்.
எஸ்.சுந்தர்(தேசியவாத காங்கிரஸ்)
விங்விஸ்டிக் மைனாரிட்டி செல் தலைவர், சௌத் இண்டியன் செல், மும்பை அவர்கள் ஒரு பேட்டியில் (தொலைகாட்சி செய்தி & you tube ) கூறும் போது இன்னொரு வரதராஜன் மும்பையில் வர முடியாது என்றும் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் இன்று மும்பையில் 'தலைநிமிர்ந்து' வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு வரதராஜ முதலியார் தான் காரணம் அதை நான் 'மார்தட்டி' சொல்லுவேன் என்று கூறியுள்ளார்.அதேபோல் அவர் முதலியார் என்று கூறி கொண்டு அவர் சார்ந்த சமுதாயத்தை மட்டும் முன்னிருத்தவில்லை தன்னை தமிழராகவும் & அனைவரையும் தமிழக சகோதர்களாகவே பார்த்தார் என்று கூறியுள்ளார்.
இன்றும் நான் வரதராஜ முதலியார் மண்ணில் (அ) சமுதாயத்தில் இருந்து வருகிறேன் என்றால் மும்பை தாராவியில் தனி மரியாதை உண்டு.
இறந்தாலும் மும்பை தாராவி மக்களின் உள்ளத்தில் வாழ்கிறார்.
Comments
Post a Comment