செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல்
மன்னர் மன்னன் என்கிற கோபதி முதலியார் (இறப்பு: 6 சூலை. 2020) என்பவர் பாரதிதாசனின் ஒரே மகனும், தமிழறிஞரும், எழுத்தாளரும், பேச்சாளரும், விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.
வாழ்கை வரலாறு :
கோபதி முதலியார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது 14 வது வயதில் தனது நண்பரான கவிஞர் தமிழ்ஒளியுடன் இணைத்து `முரசு’ என்னும் கையெழுத்து இதழை வெளியிட்டார். அந்த இதழ் அரசுக்கு எதிராக இருப்பதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தியது புதுச்சேரி பிரெஞ்சு அரசு. அப்போது கோபதிக்கு 14 வயது என்பதால் தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டார். ஆனால் கவிஞர் தமிழ் ஒளி தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கில் கோபதி என்ற இயற்பெரில்தான் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அன்றிலிருந்து இவர் மன்னர் மன்னன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 1947 இல் அந்நிய ஆட்சி அகல வேண்டும் என்று மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரஞ்சு பள்ளியில் இருந்து வெளியேற்றபட்டார். மேலும் இவர் இந்தியாவுடன் புதுவை இணைய வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் ஈடுபட்டார். 1965 நடந்ந இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 45 நாட்கள் சிறையில் இருந்தார். பின்பு புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளார். வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது, வானொலியில் பல்வேறு நாடகங்களை தயாரித்து வழங்கியுள்ளார். பாரதிதாசன் குறித்த வரலாற்று நூலான கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் என்ற நூல் உள்ளிட்ட 50க்கும்மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்து அதன் தலைவராக இரண்டுமுறை இருந்துள்ளார். இவரது பதவிக் காலத்தில் தமிழ்ச்சங்கத்திற்கு கட்டடம் கட்டித்தந்தார்.
குடும்பம்
இவர் சாவித்திரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த இணையருக்கு செல்வம், தென்னவன், பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.
இறப்பு
உடல் நலக்குறைவால் பாதிக்கபட்ட மன்னர் மன்னன் 2020 சூலை 6 அன்று தன் 92வது வயதில் புதுச்சேரியில் இறந்தார்.
எழுதிய நூல்கள் சில
கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் (பாரதிதாசனின் வரலாறு)
பாவேந்தர் படைப்புப் பாங்கு
பாவேந்தர் உள்ளம்
பாட்டுப் பறவைகள் (பாரதியின் பத்தாண்டுகால புதுச்சேரி வாழ்வு குறித்து)
நெஞ்சக் கதவுகள் (சிறுகதைகள்)
விருதுகள் தொகு
தமிழக அரசின் திரு.வி.க விருது
தமிழக அரசின் கலைமாமணி விருது
புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி.
புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது
Comments
Post a Comment