செங்குந்தர் கைக்கோள முதலியார் ⚜️ குலத்தோன்றல்⚜️ தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர் என் டி. ஆர். சுந்தரம் முதலியார் (16.07.1907 - 30.08.1963) தென்னிந்திய சினிமா துறையில் பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மிகப்பெரும் புரட்சி செய்த திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் முதலியார், பரவலாக டி. ஆர். சுந்தரம் அல்லது டி.ஆர்.எஸ் அவர்கள் பிறந்தது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெரும் செல்வந்தர் நவவீர செங்குந்தகைக்கோளர் வம்சத்து புள்ளிகாரர் கோத்திரம் VVC. இராமலிங்கம் முதலியார் - கணபதி அம்மாள்க்கு 5ஆவது மகனாக சூலை 16, 1907 அன்று பிறந்தார். இளமை பருவம்: தனது தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற சுந்தரம், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு சுந்தரம் இங்கிலாந்து சென்றார். ஜவுளித...