(?.?.?? - 27.10.2018) |
பிறப்பு:
திருப்பூர் மாவட்டம், மொரட்டுப்பாளையம் என்ற ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் கொத்துக்காட்டன் கோத்திரம் பங்காளிகள் குடும்பம் ஜமீந்தார் M.A. அங்கப்ப முதலியார்க்கு மகனாக (.??.) அன்று பிறந்தார்.
குடும்பம் மற்றும் வாழ்க்கை:
இவரின் குடும்பம் மொரட்டுப்பாளையம் உள்ளிட்ட எழு ஊர்காளை ஆண்ட பாரம்பரிய ஜமீந்தார்கள். பல ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த குடுமத்தன் கட்டுப்பாட்டில் இருந்தது.
இவர் தாத்தாவின் பெயர் ஜமீன் கு. ஆறுமுகம் முதலியார்.
இவர் தந்தை "தர்மப் பிரபு" "நியாயத் தராசு" ஜமீன்தார் எம்.எ. அங்கப்ப முதலியார் ஆவர். இவரது பெயரில் மொரட்டுப்பாளையத்தில் ஒரு ஊரே உள்ளது அந்த ஏரியாவின் பெயர் அங்கப்ப நகர் என்று இன்றும் உள்ளது. மேலும் தந்தை அங்கப்ப முதலியார் தான் மொரட்டுப்பாளையம் பஞ்சாயத்து தலைவராக கடைசிவரை பதவி வகித்தார்.
இவர் குடும்பத்தின் பேச்சுக்கு கட்டுப்பட்டுத்தான் மொரட்டுப்பாளையம் கிராம மக்கள் இருந்தனர்.
குப்புசாமி முதலியார் பழகுவதற்கு இனிய ஆனால் கண்டிப்பானவர்.
உடுமலையில் ஆண்டுதோறும் திரு.சிவசண்முகம் ஆசிரியர் நடத்திய
மாணவர்களுக்கான இலவச நோட்டு மற்றும் உதவித்தொகை வழங்கும் விழாவில் தவறாது கலந்து கொண்டு நன்கு கல்வியைப் பற்றி உரையாற்றுவார்.
நமது சமுதாயத்திற்காக கடைசிவரை பாடுபட்டவர். வியாபார ரீதியாக திருப்பூரில் தொழில் தொடங்கினார் திருப்பூர் மாநகராட்சி அருகில் தியாகச்சுடர் காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இவர்தான் முதலில் திருப்பூர் தாலுகா தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தினை துவக்கியவர்.
சாகும்வரை பொறுப்பில் இருந்தவர் அடுத்து திருப்பூர் மாவட்ட பட்டாசு விற்பனை உரிமையாளர் சங்க தலைவர் சமுதாய ரீதியாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கண்டிப்புடன் பேசுவார் நடந்துகொள்வார் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நமது சமுதாய மக்களுக்காக மற்ற சமுதாயத்தினரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசக்கூடியவர்
திறமையும் நெஞ்சுறுதியும் கொண்டவராய் வாழ்ந்தார். இவர் சொத்தில் பெரும் பங்கை மக்களுக்கு தானமாக கொடுத்துவிட்டார்.
இவரின்
கூட்டம் பெயர்: கொத்துக்காட்டான் கோத்திரம்
குலதெய்வம்: சென்னிமலை முருகன் மற்றும் சென்னிமலை மேற்குபுதுப்பளையம் அங்காளம்மன்
குலகுரு: இறையமங்கலம் இம்முடி பரஞ்சோதி குருக்கள் மடம்.
மேலும் இவரின் பிறந்த தேதி, மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.
Comments
Post a Comment