Skip to main content

கே.ஏ. காசிவிஸ்வநாத முதலியார் (சுதந்திர போராட்டத் தியாகி)


செங்குந்தர் கைக்கோள முதலியார்                  ⚜️குலத்தோன்றல்⚜️
நெசவாளர் நேசன், சுதந்திர போராட்டத் தியாகி, சன்மார்க்க நெறியாலர்
கே.ஏ. காசிவிஸ்வநாத முதலியார்

(08.03.1912  - 11.09.1980)

இளமை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஓர் நவவீரர் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார் ஞானபண்டிதன் கூட்டம் பங்காளிகள் குடும்பத்தில் 1912ம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி  K. A. காசிவிஸ்வநாக முதலியார் பிறந்தார். 1932ஆம் ஆண்டில் கன்னியம்மாலை திருமணம் செய்தார். கடவுள் பக்தியில் ஆர்வம் உள்ள இவர் 1921 ஆம் ஆன்டில் தனது 9ஆவது வயதில் ராம பால பக்த சங்கம் மூலமாக ஸ்ரீ ராமர் கோயிலை தன் பாட்டனார் தோட்டத்தில் நிறுவினார். 1926ஆம் செப்டம்பர் 04, வழிபாட்டு சங்க காரியதரிசி ஆனார்.

வாழ்க்கை:
1933ஆம் ஆண்டு பிப்ரவரி 05 இல் வழிபாட்டு சங்கம் பெயர் மாற்றம் பெற்று "சன்மார்க்க சங்கம்"
என்று பெயர் மாற்றி அதன் தலைவராக இருந்தார்

1934 முதல் 1954 வரை
திருச்செங்கோடு தாலூக்கா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பணியாற்றினார்.

1934 முதல் 1935 வரை செங்குந்தர் வாலிப சங்கத்தின் நிர்வாக சபை பரிசோதகராக பணியாற்றினார்.

1935 ஆம் ஆண்டில் நெசவாளர் கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபட்டார்.

1936ஆம் ஆண்டு முதல் திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்க காரியதரிசியாக இருந்தார்.

1938ஆம் ஆண்டு முதல் திருச்செங்கோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நிறுவப்படுவதற்கு முக்கியஸ்தராக இருந்தார்

1938 முதல் 1941 வரை திருச்செங்கோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க காரியதரிசி.

1942ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுப்பட்டதற்காக அலிபுரம் சிறைச்சாலையில் 6
மாதங்கள் அடைக்கப்பட்டார்.

1941 முதல் 1980வரை தி.கோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவராக இருந்தார்.

1947ஆம் ஆண்டு மே 15, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குநர் பதவி வகித்தார்.

1954, ஜூன் 29 முதல் 1960 அக். 30 வரை தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க
பொருளாளர் பதவி வகித்தார்.

1957ஆம் ஆண்டு அரசுப்பள்ளி மாணவர் விடுதி கட்டிடக்குழு நிர்வாக உறுப்பினர் பதவி வகித்தார்.

1960, அக். 30 முதல் 1968, ஜூன் 30, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உபதலைவராக பதவி வகித்தார்.

1980, செப். 11, திரு. K. A. காசிவிஸ்வநாத முதலியார் இறைவனடி சேர்ந்தார்.

முதலியார் வகித்த மற்றசில பொறுப்புகள்:
ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் பக்தஜன சபையின் தலைவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்.

திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் திருக்கோயில் கிருத்திகை சங்கத்தலைவர்.

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில் மார்கழி மாத திருவெண்பாவை விழாக் குழுத்தலைவர்.

சேலம் & கோவை மாவட்ட சைசிங் மில் உரிமையாளர்கள் சங்கத்தலைவர்.

திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்.

திருச்செங்கோடு கூட்டுறவு காலனியின் உப தலைவர்.

கூட்டுறவு பண்டக சாலையின் நிர்வாக உறுப்பினர்.

கூட்டுறவு நாணய சங்கத்தின் காரியதரிசி.

ஜில்லா கூட்டுறவு நெசவாளர் பெடரேஷன் நிர்வாக சபை.

கூட்டுறவு சங்க செயலாளர்
திருச்செங்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர்.
நூற்றாண்டு நினைவு நாள்


திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் உள்ள ஐயாவின் சிலை



இவரின் 
கூட்டம் பெயர்: ஞனப்பண்டிதன் கோத்திரம்
குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் சப்த கன்னிமார் சுவாமிகல்கள், உஞ்சனை, திருச்செங்கோடு.

இதுபோல் வேறு சில நம் சமூகத்தை சேர்ந்த VIP பற்றிய தகவல்கள் senguntharhistory@gmail.com என்ற mail ID க்கு Mail அனுப்புவோம்.
K

Comments

  1. திரு கே ஏ காசிவிஸ்வநாத முதலியார் திருச்செங்கோடு நெசவாளர் கூட்டுறவு காலனியை ஆரம்பிக்க முதல் முயற்சி எடுத்தவர்; மேலும் அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவசமாக ஒரு மனை அந்த நெசவாளர் கூட்டுறவு காலனியில் "ஒரு தரிக்கு ஒரு மனை" என்ற முறையில், பாகுபாடு இல்லாமல் அனைத்து கைத்தறி உரிமையாளர்கட்கும் மனை நிலம் வழங்கி, அளவான வீடும் கட்டித் தந்தார் 1960 வருடத்திலேயே.

    மேற்குறித்த முக்கிய செய்தி தங்கள் பதிவில் வரவில்லை; இந்த செய்தியைப் பதிவிட்டால் நல்லது.

    - இரா மீனாட்சி சுந்தரம்
    சொந்த ஊர்: திருச்செங்கோடு

    இருப்பது:
    கோவையில்
    9, நான்காவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர்,
    பாரதியார் பல்கலைக்கழகம் (அஞ்சல்),
    கோயம்புத்தூர் - 641046

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர