செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத்தோன்றல்⚜️
நெசவாளர்களின் காவலன், மக்கள்சேவகர்
ஏ. மாரியப்பன் முதலியார். exMLA
(02.08.1920 - 18.07.76)
சேலம் தெற்கு தொகுதியின் வளர்ச்சிக்கு முழு காரண்மானவர்.
1957 ஆம் ஆண்டில் சேலம் - I தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டமன்றத்தில் (MLA) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(சேலம் - I தொகுதி தற்ப்போது இரண்டாக பிரிக்கப்பட்டு சேலம் தெற்கு, சேலம் வடக்கு என்று அழைக்கப்படுகிறது)
சேலம் அம்மாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி இவரால் நிறுவப்பட்டது.
சேலம் கூட்டுறவு நூற்பாலையை நிறுவியவறும் இவரே.
காந்தியடிகள் மற்றும் காமராஜருடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.
1952 முதல் 1971 வரை சேலம் அம்மப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டில் மிகப் பழமையானது மற்றும் மிகப்பெரியது. இவர் இந்த சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.
மாரியப்பன் முதலியாரால் உருவான சேலம் நூற்பாலை திறப்பு விழாவில் பிரதமர் (Prime Minister) லால்பகதூர சாஸ்திரி. |
மாரியப்ப முதலியாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் அப்போதய பிரதமர் (Prime Minister) சந்திர சேகர். |
ஐயாவின் திரு உருவ சிலை |
Comments
Post a Comment