Skip to main content

கவிஞர் நா. முத்துக்குமார்


செங்குந்தர் கைக்கோள முதலியார் 
     ⚜️குலத்தோன்றல்⚜️
21ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்
நா.முத்துக்குமார் 

(12.07.1975 - 14.08.2016)
நா.முத்துக்குமார் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.
நா. முத்துக்குமார்

வாழ்க்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். 
தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். 
இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் [3], 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.
இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.

மறைவு
ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.

படைப்புகள்
இவர் பாடலெழுதிய சில திரைப்படங்கள்:
மாற்றான்
7ஜி ரெயின்போ காலனி
நந்தா
வெயில் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
புதுப்பேட்டை
சந்திரமுகி
சிவாஜி த பாஸ் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
கற்றது தமிழ்
கஜினி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
தம்பி
காதல் கொண்டேன்
காதல்
மன்மதன்
சண்டக்கோழி
தீபாவளி
போக்கிரி
பீமா
வாழ்த்துகள்
அழகிய தமிழ் மகன்
சத்தம் போடாதே
கல்லூரி
வேல்
சக்கரக்கட்டி
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஆறு
வாரணம் ஆயிரம்
சிவா மனசுல சக்தி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
அயன் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
நாடோடிகள்
வாமனன்
ஆதவன்
சுறா
யாரடி நீ மோகினி
பையா
அங்காடித் தெரு
சிங்கம்
களவாணி
மதராசப்பட்டினம்
நான் மகான் அல்ல
வானம்
ரத்த சரித்திரம்
போராளி
எத்தன்
வேட்டை
எங்கேயும் காதல்
அவன் இவன்
பொய் சொல்லப் போறோம்
நர்த்தகி
தெய்வத் திருமகள்
வந்தான் வென்றான்
நண்பன்
அரவான்
மன்னா
வழக்கு எண் 18/9
பில்லா 2
நீதானே எந்தன் பொன்வசந்தம்
முருகா

இவரது நூல்கள்
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
கிராமம் நகரம் மாநகரம்
பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
ஆணா ஆவண்ணா (கட்டுரைகள்)
என்னை சந்திக்க கனவில் வராதே
சில்க் சிட்டி (நாவல்)
பால காண்டம் (கட்டுரைகள்)
குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்)
தூசிகள் (கவிதைகள்)
அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)

விருதுகள்
2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது
2006: வெயில் திரைப்படத்திகாக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது
2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
2013: தங்க மீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
2014: சைவம் திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.

கவிஞர் நா முத்துக்குமார் (YouTube video) காணொளி 👇




மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள்....

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசு...

தா. மோ. அன்பரசன் முதலியார் (தமிழக அமைச்சர்)

  தா. மோ. அன்பரசன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார். இவர் குன்றத்தூரில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார். அரசியல் வாழ்க்கை தொகு இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வைச் சேர்ந்த பா. வளர்மதி என்பவரை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.