Skip to main content

தமிழறிஞர் சோ. ந. கந்தசாமி முதலியார்


செங்குந்தர் கைக்கோள முதலியார் 
     ⚜️குலத்தோன்றல்⚜️
சிறந்த தமிழறிஞர்
சோ. ந. கந்தசாமி முதலியார் 
(15.12.1936)
சோ. ந. கந்தசாமி 
சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர். இவர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கும் தொல்காப்பியர் விருதை வென்றவர்

வாழ்க்கைக் குறிப்பு
அறிஞர் சோ.ந.கந்தசாமி முதலியார் எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கில வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் தமிழ்நாடு, அரியலூர், உடையார்பாளையம் வட்டம், செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். கந்தசாமியார் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர். 

பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளாதாரம்) (1958) பயின்றார். எம்.லிட் (1963), முனைவர் (1971) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். 

பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும் (1979-85), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர்.

கந்தசாமியார் அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்டவீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை துணைவியாக ஏற்றுக்கொண்டவர். கந்தசாமியார் அவர்களுக்கு ஆண்மகன் ஒருவரும், பெண்மக்கள் நால்வரும் உள்ளனர்.

இயற்றிய நூல்கள்
இவர் இந்து நாளிதழில் முப்பத்தைந்து ஆண்டுகளாக நூல் மதிப்புரைகளை எழுதி வருகிறார். இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கலாம்.

இலக்கிய நூல்கள்

சங்க இலக்கியத்தில் மதுரை

திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்

இலக்கியமும் இலக்கிய வகையும்

தமிழிலக்கியச் செல்வம்(ஐந்து தொகுதிகள்)

திருமுறை இலக்கியம்

திருமுறையில் இலக்கிய வகை

உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)

மணிமேகலையின் காலம்

பரிபாடலின் காலம்

இலக்கியச்சோலையிலே

திறனாய்வு

Bharathidasan As a Romantic Poet

Anthology of Book Reviews

தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

மொழிபெயர்ப்பு

English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)

Volume II(patikam 51-100) (Tota 1026 verses)

Tirumantiram(Total 527 verses)

இலக்கணம்

தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)

தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு

புறத்திணை வாழ்வியல்

தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)

கலித்தொகை யாப்பியல்

மொழியியல்

A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)

A Linguistis of Manimekalai

தத்துவம்

தமிழும் தத்துவமும்

தமிழிலக்கியத்தில் பௌத்தம்

தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்

இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)

பௌத்தம்

Buddhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)

Indian Epistemology as Expounded in the Tamil Classics

Tamil Literature and Indian Philosophy

The Yoga of Siddha Avvai(Published in Canada)

Advaitic Works and Thought in Tamil

The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

வேறு பணிகள்
அறிஞர் சோ.ந.கந்தசாமி பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணிபுரிந்துள்ளார். 

இந்திய நடுவண் தேர்வாணையத்தின் (U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

பெற்ற விருதுகள்:
இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர். திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவரது நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. 

அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருதும் பெற்றார். தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி, குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர், திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி, மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். 

இவருக்கு இந்தியக் குடியரசுத்தலைவர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதை அளித்தார்.

ஓய்வு:
அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும்,எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள இவர் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.



Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள்....

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசு...

தா. மோ. அன்பரசன் முதலியார் (தமிழக அமைச்சர்)

  தா. மோ. அன்பரசன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார். இவர் குன்றத்தூரில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார். அரசியல் வாழ்க்கை தொகு இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வைச் சேர்ந்த பா. வளர்மதி என்பவரை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.