செங்குந்தர் கைக்கோள முதலியார் ⚜️குலத் தோன்றல்⚜️
சுதந்திர போராட்ட வீரர், தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய
அ. குழந்தைவேல் முதலியார் இவரே சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை, எஸ். சி. எம் குழுமத்தின் நிறுவனர் ஆவர்.
பிறப்பு
இவர் 1926-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் அப்போதைய கோயமுத்தூர் மாவட்டதில் (தற்போதய திருப்பூர் மாவட்டம்) நவவீரர்கள் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார்(பட்டாளியர் கோத்திரம் பங்காளிகள்) குடும்பத்தில் அமாவாசை முதலியார் - மயங்கம்மாள் தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். இவரது பெற்றோரின் ஆவர்.
இவர் 1926-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் அப்போதைய கோயமுத்தூர் மாவட்டதில் (தற்போதய திருப்பூர் மாவட்டம்) நவவீரர்கள் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார்(பட்டாளியர் கோத்திரம் பங்காளிகள்) குடும்பத்தில் அமாவாசை முதலியார் - மயங்கம்மாள் தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். இவரது பெற்றோரின் ஆவர்.
இவர் தன் துவக்கக் கல்வியை ஒரு திண்ணைப் பள்ளியில் பயின்றார். மேற்கொண்டு படிக்க குடும்பச் சூழல் இடந்தராததால், தந்தையோடுச் சேர்ந்து, நெசவு தொழிலில் ஈடுபட்டார்.
வாழ்க்கை
குழந்தைவேலுக்கு முழுவது மாக பதினான்கு வயதுகூட ஆக வில்லை. அதற்குள் அவருக்குள் சுதந்திரத் தாகம் சுரந்து, அவரை ஒரு போராளியாக மாற்றியது. நம் நாட்டில் தயாராகும் கதர் துணிகளையே அனைவரும் அணிய வேண்டும் என மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்து வந்தது நெசவாளியான குழந்தைவேலைச் சட்டென பிடித்துக் கொண்டது.
அந்த சமயத்தில் திருப்பூரைச் சுற்றி முதலியார் சமூகத்தைச் சேர்ந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த பல தியாகங்களும் குழந்தைவேலின் சுதந்திரத் தாகத்தை மேலும் அதிகமாக்கியது. குறிப்பாக, சென்னிமலையைச் சேர்ந்த குமாரசாமி (இவர்தான் பிற்பாடு திருப்பூர் குமரன் என்று பெயர் பெற்றார்!) செய்த தியாகம் குழந்தைவேலை மேலும் வெறி கொள்ளச் செய்தது.
தாய் நாட்டுக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று நினைத்த அவர், உயிரையேகூட கொடுக்கத் தயாராக இருந்தார்.
அந்த சமயத்தில் நேதாஜியின் படைக்கு நல்ல உடல்வாகு கொண்ட, தேசத்துக்காக போராடத் தயாராக இருக்கிற இளைஞர்கள் கோவையில் சேர்க்கப்பட்டு வருவதாக கேள்விப்பட்டு உடனடியாக அங்கு சென்றார்.
குழந்தைவேலின் நெஞ்சுரத்தைப் பார்த்த படைத் தளபதிகள் அவரை உடனடியாக படையில் சேர்த்துக் கொண்டனர். கிட்டத்தட்ட 15 வயதிலிருந்து ஆரம்பித்து 18 வயது வரை அவருக்கு பலவிதமான பயற்சிகளை தந்தனர்.
ஆனால், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது. குழந்தைவேலின் போராட்டமும் சாத்வீகத்துக்கு மாறியது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகுதான் லௌகீக வாழ்க்கையை வாழத் தொடங்கினார் குழந்தைவேல்.
1952-ல் அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி, நாச்சம்மாள். இந்த திருமணத்துக்கு பிறகு தான், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கி னார் குழந்தைவேல். சுதந்திரப் போராட்ட வீரனாக இருந்த அவர், ஒரு பிஸினஸ் மேனாக மாறத் தொடங்கியது இந்த காலகட்டத்தில்தான்.
திருப்பூரிலேயே ஆறு கைத்தறிகளை அமைத்து, கூலிக்கு ஆள் சேர்த்து துணிகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். மற்றவர்களுக்கு வேலை தருகிற அதேநேரத்தில் அவரும் நெசவு நெய்தார். இதனால் அவரது தொழில் நன்கு வளர்ச்சி கண்டது.
இதற்கிடையே அவருக்கு குழந்தைகளும் பிறந்தனர். தொழிலை விஸ்தரிக்கவும், குழந்தைகளின் படிப்பிற்காகவும் கிராமத்திலிருந்து திருப்பூருக்கு இடம் பெயர்ந்தது குழந்தை வேலின் குடும்பம்.
கதராடை தயாரிப்பை கற்றுத் தேர்ந்தவருக்கு, தான் தயாரிக்கும் துணிகளை தானே ஏன் விற்கக்கூடாது என்கிற எண்ணம் வந்தது.
1962-ல் மதுரையில் கஸ்தூரிபாயின் பெயரில் ஒரு கதர் துணிக் கடையைத் தொடங்கினார் குழந்தைவேல். ஏழை விவசாயி கள் அணிந்துகொள்ளத் துணி இல்லாதபோது, தனக்கு மட்டும் ஏன் இத்தனை துணிகள்? இனி ஒரு வேஷ்டி எனக்குப் போதும் என்று காந்தி சபதம் எடுத்தது மதுரையில்தானே! அதனால் அந்த மதுரையிலேயே தனது முதல் கதர் கடையைத் திறந்தார் குழந்தைவேல். இதற்காக அவர் முதலீடு செய்த தொகை 5,000 ரூபாய்.
தரமான துணி, நியாயமான விலை, நல்ல சர்வீஸ் என ஆரம்பித்த அந்த கடை மதுரை மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1964-ல் இரண்டாவது கடையையும், 1973-ல் மூன்றாவது கடையையும் மதுரையிலேயே திறந்தார். அந்த கடைகளும் நல்ல வளர்ச்சி தரவே, 1976-ல் சேலத்திலும், 1979-ல் ஈரோட்டிலும் கதர் கடையைத் தொடங்கி முழுநேர பிஸினஸ்மேனாக மாறினார் குழந்தைவேல் முதலியார்.
காலத்துக்கேற்ப மாறுவது ஒரு பிஸினஸ்மேனிடம் அடிப் படையாக இருக்க வேண்டிய விஷயம். குழந்தைவேலிடம் அது நிறையவே இருந்தது. இத்தனை நாளும் கதர் விற்பனைக்காக மட்டுமே பாடுபட்டவர், உலகம் வேறு பல விஷயங்களை வேண்டுவதை புரிந்து கொண்டார். அதிலும், திருப்பூர் என்பது பின்னலாடை உற்பத்தியில் முக்கிய நகரம்.
அங்கிருந்து கொண்டு பின்னல் ஆடை பிஸினஸில் ஈடுபடாமல் இருக்க முடியுமா?
1984-ல் ஈரோட்டில் பிரின்டிங் யூனிட் ஒன்றைத் தொடங்கியதோடு, திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியையும் செய்ய ஆரம்பித்தார். இதுவும் ஜவுளி வியாபாரம் என்றாலும் முழுக்க வேறுபட்ட தொழில் இது. ஆனால், அதிலும் வெற்றி காணுகிற திறமை குழந்தைவேலிடம் நிறையவே இருந்தது.
ஏற்றுமதி பிஸினஸ், அவருக்கு பல நகரங்களிலும் இருக்கும் ஜவுளி வர்த்தகர்களை அறிமுகம் செய்தது.
தரமான துணிமணிகள் குறைந்த விலையில் எங்கெங்கு கிடைக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட குழந்தைவேல், திருப்பூரில் ஒரு பெரிய ஜவுளிக் கடை ஆரம்பித்தால் என்ன என்று நினைத்தார். இந்த சமயத்தில் அவரது மகன்களும் நன்கு வளர்ந்து தந்தைக்கு தோள் தர, பிஸினஸில் குதித்திருந்தனர்.
1991-ல் திருப்பூரில் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் என்கிற பெயரில் ஒரு பெரிய டெக்ஸ்டைல் ஷோரூம் ஒன்றைத் தொடங்கினார். இந்த ஷோரூம் திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு மக்களிட மிருந்து நல்ல ஆதரவைப் பெறவே, 1996-ல் கோவையிலும் 2000-ல் ஈரோட்டிலும், 2001-ல் சென்னையிலும் தொடங்கினார்.
ஆனால், சென்னையில் இந்த டெக்ஸ்டைல் ஷோரூம் திறந்த போது ஸ்ரீ குமரன் சில்க்ஸ் என்றில்லாமல், தி சென்னை சில்க்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். தி.நகரில் இன்று இருக்கும் பல்வேறு டெக்ஸ்டைல் ஷோரூம்களில் இந்த சென்னை சில்க்ஸும் முக்கியமானது.
குழந்தைவேல் முதலியாருக்கு வெறும் டெக்ஸ்டைல் மட்டுமே தெரியும் என்று நினைத்துவிடக் கூடாது. பொன் நகைகள் விற்பனையிலும் அவர் நிபுணராகவே இருந்தார். பல ஆண்டுகளாக அத்தொழிலில் அவருக்கு இருந்த அனுபவத்தால், 1993-ல் திருப்பூரில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்கிற பெயரில் ஒரு நகைக் கடையைத் திறந்தார்.
ஜவுளித் துறையில் மட்டும் இன்றி, நகை வியாபாரத்திலும் பெரும் வெற்றி பெற, 1995-ல் கோவையிலும், 2000-ல் ஈரோட்டிலும், 2005-ல் திருச்சியிலும், 2006-ல் சென்னை யிலும் தங்க நகைக் கடைகளைத் திறந்தார். இன்றைக்கு இந்த கடைகள் முக்கியமான நகை விரும்பிகளின் அபிமானத்தைப் பெற்றதாக இருக்கின்றன.
இப்படி தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்த குழந்தை வேல் முதலியார் 2007-ல் தனது 81-வது வயதில் காலமானார். வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் தன் வாழ்க்கையைத் தொடங்கிய குழந்தைவேல் முதலியார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல பிஸினஸ்களை விட்டுச் சென்றார்.
இன்றைக்கு அந்த பிஸினஸ் களை அவரது வாரிசுகள் புதிய உயரத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக் கின்றனர். உழைப்பும், தீர்க்க தரிசனமும் இருந்தால் சாதாரண மனிதர்களும் பெரும் பிஸினஸ்மேன்களாக வரமுடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் குழந்தைவேல் முதலியார் என்பதில் சந்தேகமே இல்லை.
சென்னை சில்க்ஸின் இந்த பிஸினஸ் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் அ.குழந்தைவேல் முதலியாரும், அவருடைய 8 வாரிசுகளும்தான்.
இவை மட்டும் இல்லாமல் ஸ்பின்னிங் மில்கள், பின்னுதல், அச்சிடுதல், எம்பிராய்டரி மற்றும் தையல் இயந்திரங்கள் போன்றவற்றையும் தங்களது பின்புலமாகச் சென்னை சில்க்ஸ் வைத்துள்ளது.
சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் 80 மெகா வாட்ஸ் வரை காற்றாலை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பிரிவும் உள்ளது.
இவரின்
கோத்திரம் பெயர்: பட்டாளியர் கூட்டம் பங்காளிகள்.
குலதெய்வம்: திருச்செங்கோடு செங்கோட்டுவேலர் மற்றும் ஈரோடு மாவட்டம் விஜயாபுரிஅம்மன்.
மேலும் இவரின் பிறந்த தேதி, மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.
Comments
Post a Comment