Skip to main content

தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார் முதலியார்


செங்குந்தர் கைக்கோள முதலியார் 
     ⚜️குலத்தோன்றல்⚜️
தமிழறிஞர் 
க. வெள்ளை வாரணனார் முதலியார்
(14.01.1917 - 13.06.1988)
தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார்: அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் 'இசைத் தமிழ்' என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.

இளமை

தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் ஓர் நவவீரர் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் கந்தசாமி முதலியார் - அமிர்தம் அம்மையார் தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். 
பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935 இல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1935-37 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, 'தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு' என்னும் ஆய்வேட்டினை எழுதி முடித்தார்.வெள்ளைவாரணனார் 1938 முதல் 1943 வரை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

பணி

1943 இல் வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1962 இல் இவரின் புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக்கழகம் இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கியது.
1977 ஆம் ஆண்டு துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக்கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தம் 62 இம் வயது வரை அங்குப் பணியாற்றி 1979 இல் ஓய்வு பெற்றார். 
1979 முதல் 1982 ஆம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.
பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் மாணாக்கரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞரகத் திகழ்ந்தார்.

நூல்கள்

வெள்ளைவாரணனாரின் உரை நூல்கள் அவரின் நுண்மாண் நுழை புலத்தினைக் காட்டுவன. விபுலானந்தரின் யாழ் நூலுக்கு இவர் எழுதியுள்ள முன்னுரை இவரின் இசைப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. வெள்ளைவாரணனார் எழுதிய நூல்கள் சில
இலக்கண நூல்கள்
தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்
தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்
தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம்
தொல் - பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்)
சங்க இலக்கியம் சார்ந்த நூல்கள்
குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி
சங்ககால தமிழ் மக்கள்
சைவ சமயம் சார்ந்த நூல்கள்
திருவுந்தியார்
திருக்களிற்றுப்படியார்
சேக்கிழார் நூல்நயம்
பன்னிரு திருமுறை வரலாறு
தில்லைப் பெருங்கோயில் வரலாறு
திருவருட்பாச் சிந்தனை
உரை நூல்கள்
தேவார அருள்முறைத் திரட்டுரை
திருமந்திர அருள்முறைத் திரட்டுரை
திருவருட்பயன் விளக்கவுரை
பிற
காக்கை விடு தூது என்னும் படைப்பிலக்கியத்தையும்,இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். இவரது நூல்களுள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
அற்புதத் திருவந்தாதி
இசைத்தமிழ்
காக்கை விடு தூது
பன்னிரு திருமுறை வரலாறு
பன்னிரு திருமுறை வரலாறு - இரண்டாம் பகுதி
சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
சங்ககாலத் தமிழ் மக்கள்
தில்லைப் பெருங்கோயில் வரலாறு
திருமந்திர அருள்முறைத் திரட்டு
திருத்தொண்டர் வரலாறு
திருவருட்பாச் சிந்தனை
திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்
தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு
தொல்காப்பியம் களவியல் உரைவளம்
தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்
தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்
தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம்
தொல்காப்பியம் நன்னூல் - சொல்லதிகாரம்
தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்
தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்
தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்
தொல்காப்பியம் வரலாறு
திருவருட் பயன்
தொல்காப்பியம்-செய்யுளியல் உரைவளம்
தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்
கவிதை நூல்கள்.
இந்தி மொழி எதிர்ப்பு
இராஜ கோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சரக இருந்த போது 1938 இல் இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணாதுரை முதலானோர் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939 இல் 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைப் பெயரில் 'காக்கை விடுதூது' என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.

சிறப்புகள்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985 இல் கலைமாமணி விருதை வழங்கியது. தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு இலக்கியம் மற்றும் சமய அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் வெள்ளைவாரணனாருக்குப் பல்வேறு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளன.
சித்தாந்தச் செம்மல்
தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்
திருமுறை உரைமணி
செந்தமிழ்ச் சான்றோர்
தமிழ்மாமணி
சிவகவிமணி
திருமுறைத் தெய்வமணி
தமிழ்ப் பேரவைச் செம்மல்
ஆகிய விருதுகள் பல்வேறு ஆண்டுகளில் இவருக்கு வழங்கப்பட்டன.

மறைவு

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது.எனவே தில்லை சென்று தங்கி வாழ்ந்திருந்த வெள்ளைவாரணனார் 1988 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

வெள்ளைவாரணனார்  ஐயா பற்றிய (YouTube video) காணொளி 👇




மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர