Skip to main content

Posts

Showing posts from April, 2021

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந